Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர் மறைவு: முக ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (10:35 IST)
புற்றுநோயால் இன்று அதிகாலை மரணமடைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தை சேர்ந்த அனந்தகுமார் மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார். இவர் பாஜகவை சேர்ந்தவர் ஆவார்.
 
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவரது உடல்நலம் சீராகவே அவர் கர்நாடகத்திற்கு திரும்பினார்.
 
சமீபத்தில் அவரது உடல்நலம் மீண்டும் மோசமாகவே அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அனந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் அனந்தகுமாரின் மறைவிற்கு இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments