ஒருத்தன் என்னன்னா பிரியாணிய வச்சு கட்சி பேர கெடுத்தா, நீங்க என்னன்னா பாட்டுபாடி பேர கெடுக்கிறீங்க: வேலுவை வெளுத்துவாங்கிய ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (12:24 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பஜனை பாடல் பாடியதற்கு செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் மறைவுக்கு பின் தினந்தோறும் அவரின் சமாதிக்கு சென்று திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  சமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பலரும் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
 
அப்போது,  எங்கள் தலைவரே.. தங்கத் தலைவரே என அவர்கள் வாத்தியங்கள் இசைத்து பாடல்களை பாடினர். பாடல்களை பாடியதோடு மட்டும் நிறுத்தாமல், ஒரு கட்டத்தில் ஓவரா பரவசமான வேலுவும், திமுக தொண்டர்களும் டான்ஸ் ஆட தொடங்கினர். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
இதனால் கடுப்பான திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வேலுவை அழைத்து ஒருத்தன் என்னன்னா பிரியாணிய வச்சு கட்சி பேர கெடுத்தான், நீங்க என்னன்னா பாட்டுபாடி, டான்ஸ் ஆடி பேர கெடுக்கிறீங்க என வேலுவிடம் ஸ்டாலின் கடிந்து பேசியுள்ளார். இதனால் வேலு பயங்கர அப்செட் ஆகியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்! - இன்று திறந்து வைக்கிறார் ’தல’ தோனி!

கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்.. டிஜிபி அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்..!

10 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

விஜய் வீட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு திடீரென சென்ற போலீசார். அரை மணி நேரம் என்ன நடந்தது?

இருமல் மருந்தால் 21 குழந்தைகள் பலி: 'கோல்ட்ரிஃப்' உரிமையாளரை தமிழகம் வந்து கைது செய்த மத்திய பிரதேச காவல்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments