Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள்.. சென்னை வரும் தேசிய தலைவர்கள்..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (10:30 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாட இருப்பதாகவும் அன்றைய தினம் நடைபெறும் பிரம்மாண்டமான கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டிசென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் ஒன்றாம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 
இந்த பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் முக்கிய தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்க வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டு உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments