Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலின் தான் ஜல்லிக்கட்டு கலவரத்துக்கு காரணம்: ஆதாரத்தை கையில் வைத்திருக்கும் நடராஜன்!

ஸ்டாலின் தான் ஜல்லிக்கட்டு கலவரத்துக்கு காரணம்: ஆதாரத்தை கையில் வைத்திருக்கும் நடராஜன்!

ஸ்டாலின் தான் ஜல்லிக்கட்டு கலவரத்துக்கு காரணம்: ஆதாரத்தை கையில் வைத்திருக்கும் நடராஜன்!
, திங்கள், 30 ஜனவரி 2017 (09:35 IST)
உலகமே வியக்கும் வண்ணம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் அறப்போராட்டத்தை நடத்தினர். ஆனால் அந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இதற்கு காரணம் திமுகவும், ஸ்டாலினும் தான் என சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.


 
 
திருமணவிழா ஒன்றில் கலந்துகொண்ட நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியான முறையில் தான் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் யாருக்கும் தொந்தரவு செய்யவில்லை. யாருக்கும் தொல்லை கொடுக்காமல் அமைதியான அறப்போராட்டத்தை ஒழுக்கமாக ஒற்றுமையாக செய்து வந்தார்கள்.
 
ஆனால் அந்த போராட்டத்தில் அரசியலை புகுத்த நினைத்த ஸ்டாலின் செய்த தவறு தான் இந்த கலவரத்துக்கு காரணம். மாணவர்களை தூண்டி அவர்களுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் திமுக இயங்கியது. சில விஷமிகளை திமுக உள்ளே அனுப்பியது.
 
திமுக விஷமிகளை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனுப்பியதற்கான அத்தனை ஆதாரங்களும் இருக்கிறது. நடந்த வன்முறை சம்பவத்துக்கு இவர்கள்தான் அடிப்படை காரணம். அதற்காக மாணவர்கள், பொதுமக்கள் என சம்பந்தமில்லாதவர்கள் இதில் தாக்கப்பட்டிருந்தால் அதை நான் கண்டிக்கிறேன்.
 
போராட்டத்தில் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியதாக சொல்கிறார்கள். திமுகவும், சில அமைப்புகளும் தான் இதற்கு காரணம் என்றார் நடராஜன்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டி?: அதிரடி அரசியல் ஆரம்பம்!