Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்

மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (04:09 IST)
திராவிடர் கழகம் சார்பில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் கூறியதாவது,


 
“மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைய நேரிடும். இதன் மூலம் 14 வயது வரை இலவச கல்வி என்ற சட்டத்தின் நோக்கம் முற்றிலும் பறிக்கப்படும். மாணவர்களுக்கான சத்துணவு திட்டம் பாதிக்கப்படும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்படும். இந்தப் புதிய கல்விக் கொள்கை மூலம் குலக் கல்வியை புகுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க, ஏற்கெனவே கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு விண்ணப்பித்துள்ளோம்.

ஆனால், கடிதம் கொடுத்து ஒரு வாரமாகியும் இதுவரை அந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சட்டப்பேரவையில் எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்தப் புதிய கொள்கையை கண்டிக்கத் தயாராக உள்ளன. எனவே ஆளுங்கட்சி இக்கொள்கையைக் கண்டித்து தனி தீர்மானம் கொண்டுவர வேண்டும். ஒருவேளை, அரசு தீர்மானம் கொண்டு வராவில்லையென்றால், எதிர்க்கட்சிகள் தனித் தீர்மானம் கொண்டு வர உரிமை உள்ளது. இவை எல்லாவற்றையும் மீறி, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால், 1938, 1939, 1965-ஆம் ஆண்டுகளில் நடந்ததைப் போன்று ஒரு போராட்டம் நடக்கக்கூடும் என்பதையும் எச்சரிக்க விரும்புகிறேன்” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments