சென்னையில் இரவு நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை கத்தியால் குத்திய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் மகேஷ் என்பவருக்கு நேற்று, இரவு பணி என்பதால் இளைஞர் காவல்படையை சேர்ந்த சரவணன் என்பவரோடு சேர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாக ஹாரிங்டன் சாலையில் இருந்த வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, அப்பகுதிக்கு இருவரும் சென்றிருக்கின்றதாக கூறப்படுகிறது. இருவரும் அங்கு வந்தபோது, அவர்களை பின்ன தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் காவலர் மகேஷை கத்தியால் குத்திவிட்டு அங்கு இருந்து தப்பியோடி உள்ளார். படுகாயம் அடைந்த காவலர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, போலீஸார் மர்ம நபரை தேடி வருகின்றனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் சந்தீப் என்பதும், ஹாரிங்டன் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.