இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

Siva
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (07:11 IST)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன. இந்த தேர்வுகளின் முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் மார்ச் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த தேர்வுகளை 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். மொழிப்பாடங்கள்,  கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், இன்று இறுதி தேர்வாக சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வுடன் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முழுமையாக முடிவடைகின்றன. மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் திருத்தும் பணிக்காக முகாம்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. ஏப்ரல் 21ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மதிப்பீடு செய்வார்கள். அதன் பின்னர் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments