தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணை மற்றும் ரிசல்ட் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது.
அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 11ம் தேதி தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிவடைகிறது. காலை 10.15 தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கு இடையேயும் மாணவர்கள் முழுதாக தயாராவதற்காக 5, 6 நாட்கள் இடைவெளி உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 11 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
மார்ச் 16 - ஆங்கிலம்
மார்ச் 25 - கணிதம்
மார்ச் 30 - அறிவியல்
ஏப்ரல் 2 - சமூக அறிவியல்
ஏப்ரல் 6 - தேர்வு மொழி
Edit by Prasanth.K