கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கோவையை சேர்ந்த வடவள்ளி என்ற பகுதியை சேர்ந்த 27 வயது ஸ்ரீவித்யா என்பவருக்கு 4 வயது மகன் மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது..
இந்த நிலையில் தனது குழந்தைகளுக்கு பால் கொடுத்தது போல மீதம் உள்ள தாய்ப்பாலை அவர் சேமித்து தானம் செய்துள்ளார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு இவர் தானமாக கொடுத்த தாய்ப்பால் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ள ஸ்ரீவித்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.