அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி, மகளுக்கும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (13:00 IST)
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் 46,000 மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா பாதிப்பால் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமின்றி ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
அதிமுக எம்எல்ஏ பழனி அவர்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருடைய குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments