Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்” – இலங்கை நிவாரண பையில் இடம்பெற்ற வாசகம்!

Advertiesment
Relief Bag
, வியாழன், 12 மே 2022 (16:52 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் தமிழர்களுக்கு அனுப்பப்படும் நிவாரண பைகளில் இடம்பெற்றுள்ள வாசகம் வைரலாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. மக்கள் பலர் உண்ண உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசின் அனுமதியோடு இலங்கை தமிழ் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பொதுமக்கள் பலரும் கூட நிதியளித்த நிலையில், உணவு பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு இலங்கைக்கு அனுப்ப உள்ளது.

இந்நிலையில் இலங்கை மக்களுக்காக அனுப்பப்படும் நிவாரண பைகளில் “தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் பிரதமர் பதவியை ஏற்க தயார் ...எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு