16 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை அதிபர் இந்திய வருகைக்கு பின் நடக்கும் சம்பவம்..!

Siva
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (07:25 IST)
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு குறித்த விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

ஆனால், அவரது வருகைக்கு பின்னரும், மீண்டும் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  சிறைபிடிக்கப்பட்டு   உள்ளதாகவும், அவர்கள் சென்ற இரண்டு விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கு பின்னர் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments