தீபாவளி சிறப்பு வந்தே பாரத் ரயில்.. சென்னை - நெல்லை இடையே இயக்கம்..!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (07:41 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என்பதும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபாவளி முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. நாளை அதாவது நவம்பர் 9ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் மதியம் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மறு மார்க்கமாக மதியம் மூன்று மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் சிறப்பு வந்தே பாரதரையில் இரவு 11:15க்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டுள்ளதால் இதனை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments