Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள்: முழு விவரங்கள்..!

Mahendran
வெள்ளி, 17 ஜனவரி 2025 (14:57 IST)
பொங்கல் பண்டிகை கொண்டாட சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பி வர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
1. மண்டபம் - எழும்பூர் சிறப்பு ரயில்: மண்டபத்தில் இருந்து ஜனவரி 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும்  சிறப்பு ரயில்  மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மண்டபம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை,  திருச்சி, தஞ்சாவூர், சீர்காழி, விழுப்புரம், திண்டிவனம் வழியாக இயக்கப்படுகிறது.
 
2. தூத்துக்குடி -  தாம்பரம் சிறப்பு ரயில்:  தூத்துக்குடியில் இருந்து வருகிற ஜனவரி 19 ஆம் தேதி பகல் 4.25 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டு, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது. 
 
3. மதுரை - சென்னை சிறப்பு ரயில்: மதுரையிலிருந்து சென்னைக்கு ஜனவரி 19-ல் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ஜனவரி 18ஆம் தேதி காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்து சேரும். மறு வழித்தடத்தில் மதுரை-சென்னை முன்பதிவில்லா மெமு ரயில் (06062) வருகிற 19-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
 
இந்த ரயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகம்' மாநாடு: நடிகர் விஜய் மதுரைக்கு வருகை!

எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்! - ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் அறிக்கை!

நிதி மோசடி வழக்கில் பணம் திரும்ப வந்ததாக ஒரு சம்பவம் உண்டா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

துணைக் குடியரசுத் தலைவர்! முன்னாள் நீதிபதியை களமிறக்கிய இந்தியா கூட்டணி!

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments