கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

Siva
செவ்வாய், 7 ஜனவரி 2025 (10:46 IST)
கும்பமேளா திருவிழாவை ஒட்டி நெல்லையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியில் ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த விழாவின்போது காசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதும், அன்றைய தினத்தில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது.

இந்த நிலையில், காசிக்கு செல்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நெல்லையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையிலிருந்து பிப்ரவரி 5ஆம் தேதி இந்த ரயில் அதிகாலை ஒரு மணிக்கு புறப்பட்டு, மதுரையிலிருந்து அதே நாள் காலை ஆறு மணிக்கு கிளம்பும். பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு காசிக்கு சென்றடையும். அன்று மாலை கங்கா ஆர்த்தி பார்த்து, மறுநாள் முழுவதும் சுற்றுலா தளங்களுக்கு சென்று, அதன் பின்னர் ஒன்பதாம் தேதி காசி விசுவநாதர் ஆலயம், விசாலாட்சி ஆலயம் ஆகிய கோயில்களுக்கு செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

10ஆம் தேதி அயோத்தி சரயு நதி மற்றும் ராமஜென்ம பூமி கோவிலில் வழிபாடு செய்து, அன்றைய தினம் இரவு இந்த சிறப்பு ரயில் புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலில் பயணம் செய்ய, ஒரு நபருக்கு 26,850 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: குடிமகன்களுக்கு குஷியான வாக்குறுதி கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

ஃபுட்பால் மாதிரி மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது.. 8 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

எங்கள் கட்சி வேட்பாளர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..!

சிமெண்ட் கான்க்ரீட்டில் சிக்கிய குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்! கேரளாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments