Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்!

J.Durai
திங்கள், 9 செப்டம்பர் 2024 (10:34 IST)
கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக, கோவை மாநகர காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து விசாரணையில் களமிறங்கிய கோவை தனிப்படை காவல்துறையினர், சிக்கந்தர் பாதுஷா, ஸ்டீபன் ராஜ் என்ற இரண்டு ஏஜென்ட்களை கைது செய்தனர்.
 
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்தியா முழுவதும்  whatsapp குழு ஏற்படுத்தி, 117 ஏஜென்ட்கள் மூலம் விபச்சார தொழில் செய்வது தெரியவந்தது.
 
கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட்டல்களில்,
நீண்ட நாட்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ரஷ்யா இந்தோ,னேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, விபச்சாரத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
 
வாட்ஸ்சாப் குழு மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம்கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வாட்ஸ்சாப்  மூலமாக விபச்சாரத் தொழிலை, வெளிநாட்டு பெண்களை வைத்து செய்து வந்த கபீர் சிங் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருவதாக, வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் கோவில், மசூதி தொடர்பாக வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம் தடை..!

சென்னைக்கு இதுதான் கடைசி மழையாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்..!

மகளிர் உதவித்தொகை ரூ.2100 ஆக உயர்த்தப்படும்: அதிரடி அறிவிப்பால் பெண்கள் மகிழ்ச்சி..!

மணிப்பூருக்கு போக சொன்னால் கரீனா கபூரை பார்க்க செல்கிறார் மோடி: காங்கிரஸ்

டிசம்பர் 15ஆம் தேதி இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments