Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் மொட்டை கிருஷ்ணன்.. இண்டர்போல் உதவியை நாடிய தனிப்படை போலீஸ்..!

Mahendran
புதன், 21 ஆகஸ்ட் 2024 (13:55 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மொட்டை கிருஷ்ணன் சிங்கப்பூரில் 10 நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து அவரை பிடிக்க இன்டர்போல் உதவியை தனிப்படை போலீசார் நாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆர்ம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை குறித்து தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை சுமார் 20 பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மொட்டை கிருஷ்ணனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் சிங்கப்பூரில் 10 நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

சம்போ செந்தில்  கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் விரைவில் அவர் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக  லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments