Publish Date: Wed, 21 Aug 2024 (07:21 IST)
Updated Date: Wed, 21 Aug 2024 (07:23 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று சந்தேகப்படும் மொட்டை கிருஷ்ணன் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் தாய்லாந்திற்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரிய வந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மொட்டை கிருஷ்ணனுடன் செல்போனில் உரையாடியதாக பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் இன்னும் இந்த வழக்கில் சில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி உண்மையான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.