சென்னையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் 2,000-த்துக்கும் மேலாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் உள்ள 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1,000-த்தை கடந்துள்ளது. வடசென்னை பகுதிகளில் பாதிப்பு குறையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதையடுத்து சென்னையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
ஆனால் அதனையும் மீறி பலர் சிலர் பாதுகாப்பு இல்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். எனவே நிலையை கட்டுக்குள் கொண்டு வர அதிரடி படை மூலம் கூடுதல் காவல்படையை களமிறங்கி உள்ளனர். இவர்கள் குறிப்பாக வடசென்னையை கட்டுக்குள் வைப்பார்கள் என தெரிகிறது.