Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.63.2 லட்சம் தங்கம்

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (09:42 IST)
துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.63.2 லட்சம் மதிப்புடைய ஒன்றே கால் கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, கன்னியாகுமரி பயணியை சுங்கத்துறை கைது செய்தனா்.

 
துபாயிலிருந்து ஃபிளை துபாய் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது அந்த பயணிகளில் ஒருவரா டிப்டாப் இளைஞா் தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். ஆனால் சுங்கத்துறையினருக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.
 
இதையடுத்து அந்த  இளைஞரை மீண்டும் சுங்கதுறை அலுவலகத்திற்கு அழைத்துவந்து விசாரித்தனா். அவா் கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்தவா், சாமீனோ ஜேசையா (26). இவா் கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊா் திரும்புகிறார். அவருடைய உடமைகளை முழுமையாக சோதனையிட்டனா்.அதில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனா்.
 
அவா் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் பெல்ட்க்கு அடியில் மறைத்து வைத்திருந்த தங்க பேஸ்ட் அடங்கிய பிளாஸ்டிக் பவுச்களை கைப்பற்றினா். அவைகளில் மொத்தம் ஒரு கிலோ 250 கிராம் தங்க பேஸ்ட் இருந்தது. அதன் சா்வதேச, மதிப்பு ரூ.63.2 லட்சம். இதையடுத்து சுங்கத்துறையினா் பயணி சாமீனோ ஜேசையாவை கைது செய்து தங்கத்தையும் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments