திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் பாதையில் கட்டணமில்லா சிற்றுந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் நவம்பர் 25 முதல் 27 முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும், பெங்களூரு, புதுவை ஆகிய பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் சென்று திரும்ப 40 கட்டணமில்லா பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்