Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உங்க ஊருக்கு பஸ் எங்கே ? – பொங்கல் தற்காலிக பேருந்து நிலையங்கள் விவரம்

உங்க ஊருக்கு பஸ் எங்கே ? – பொங்கல் தற்காலிக பேருந்து நிலையங்கள் விவரம்
, திங்கள், 31 டிசம்பர் 2018 (08:51 IST)
பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னையில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றின் விவரங்களைப் பார்ப்போம்.

பொங்கல் மற்றும் தீபாவளி ஆகியப் பண்டிகைகளின் போது சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அது போன்ற நேரங்களில் சென்னையில் இருந்து அந்தந்த ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் அரசால் இயக்கப் படுகின்றன. ஆனாலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் சென்னைக்கு செல்வதற்குள்ளாகவே இரண்டு மணி நேரம் ஆகிவிடும். அந்த அளவுக்கு போக்குவரத்து செரிசல் ஏற்படும்.

அதனால் ஒரே இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்காமல் பண்டிகைக் காலங்களில் வெவ்வேறு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்களைத் தமிழக போக்குவரத்துத் துறை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 வெவ்வேறு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
webdunia

இந்த பேருந்து நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும் என்ற விவரம் பின்வருமாறு

மாதவரம் – ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள்
கே.கே. நகர் – ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாக செல்லும் பேருந்துகள்
தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம் –விக்கிரவாடி, பன்ரூட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்
பூவிருந்தவல்லி – வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்
கோயம்பேடு – மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும்.

இந்த சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் ஜனவரி 11,12,13,14 ஆகிய நான்கு நாட்களில் செயல்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களே! முடிஞ்சா கொலை செய்யுங்க! பல்கலை துணைவேந்தர் சர்ச்சை பேச்சு