திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Siva
ஞாயிறு, 2 நவம்பர் 2025 (09:57 IST)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, மாநிலம் முழுவதும் இருந்து 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
 
திருவண்ணாமலை நகருக்கு வெளியே திண்டிவனம், செங்கம், வேலூர் சாலைகள் உள்ளிட்ட 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 4,764 பேருந்துகளும், 70 மினி பேருந்துகளும் இயக்கப்படும்.
 
தற்காலிக நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலப் பக்தர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த ஏற்பாடுகள் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் சிரமமின்றி திருவிழாவில் பங்கேற்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்: தவெக புறக்கணிக்க முடிவா?

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments