சட்டப்பேரவையில் திமுக, அதிமுக மற்றும் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த அமளிக்கிடையே முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார்.
இந்நிலையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள், மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதை சபாநாயகர் ஏற்கவில்லை.
எனவே, மற்றொரு நாளில், குறைந்த பட்சம் ஒரு வாரம் கழித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனல், ஓ.பி.எஸ் மற்றும் எதிர்கட்சிகளின் கோரிக்கை அனைத்தும் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கல் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் சபாநாயகரின் இருக்கை முன்பு சென்று அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவரின் இருக்கை மற்றும் மைக் ஆகியவற்றை அவர்கள் உடைத்தனர். இதனால், அவையை ஒரு மணி வரை ஒத்தி வைத்து விட்டு, சபாநாயகர் சபையிலிருந்து வெளியேறினார்.