Publish Date: Sat, 02 Dec 2023 (14:48 IST)
Updated Date: Sat, 02 Dec 2023 (14:49 IST)
அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்து மீறுவதாகவும் குறிப்பாக மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியது கையும் களவும் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் என்னையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று மாதங்களாக மிரட்டினார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்னை ஊரை விட்டு போக சொன்னார்கள் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசின் பெயரைச் சொல்லி என்னை மிரட்டினார்கள் என்றும் இடைத்தரகர்கள் மூலம் பணம் பறிக்க முயற்சி நாடு முழுவதும் நடக்கின்றது என்றும் குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களில் இடைத்தரகர்கள் மிரட்டல் விடுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய செய்திகள் பரவி வரும் நிலையில் சட்டசபையின் சபாநாயகருக்கே மிரட்டல் வந்திருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது