Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெச்.ராஜாவிற்கு என்ன தகுதி இருக்கிறது? - சுப உதயகுமார் விளாசல்

, செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (10:05 IST)
தமிழகத்தில் சாரணர் சாரணியர் இயக்கத்தலைவராக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


 

 
இந்நிலையில் இதுபற்றி  பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
"சாரணர், சாரணியர் இயக்கத்துக்கு பி.ஜே.பி ஹெச்.ராஜாவை நியமிக்க பாசிச அடிமை அரசு துடிப்பதன்மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் காக்கி டவுசரும், அதன் கொள்கைகளும் கொடுத்து, அடுத்த தலைமுறையினருக்கு ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்தங்களை விதைக்க பா.ஜ.க அரசு மறைமுகமாக முயல்கிறது. தமிழக அரசை நிர்பந்தித்து,பிஞ்சுக் குழந்தைகளின் மத்தியில் நஞ்சை விதைக்கத் துடிக்கிறது.

webdunia

 

 
பேனாக்களும் புத்தகங்களும், நோட்டுகளும் தூக்கவேண்டிய வயதில், கத்திகளைத் தூக்கி, புத்திக்கூர்மையை மழுங்கடித்து, இந்துத்துவா விதைகளை விதைத்து, தமிழகமெங்கும் காவி மையத்தைப் பள்ளிகளிலிருந்து தொடங்க பி.ஜே.பி திட்டமிடுகிறது.
 
வரலாற்றுச் சிறப்பு மிக்க சாரண, சாரணியர் இயக்கத்தில், காவியைத் தூக்கிப் பிடிப்பதோடு, மதக்கலவரத்தையும் சாதிக் கலவரத்தையும் தூண்டும் விதத்தில் தொடர்ந்து பேசிவருகிறது.போராளிகளை மட்டுமல்லாமல் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களையும் தேசவிரோதிகளாகப் பேசிவரும் பி.ஜே.பி-யின் ஹெச். ராஜாவை நியமிக்க என்ன தகுதி இருக்கிறது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக பொதுக்குழு ; சசிகலா, தினகரன் நீக்கம்? ; தீர்மானங்கள் விவரம்