Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் எத்தனை பெண்களை காவு வாங்குவீர்கள்: கைதான சௌமியா அன்புமணி ஆவேச பேட்டி..!

Siva
வியாழன், 2 ஜனவரி 2025 (12:40 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தமிழகத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் எத்தனை பெண்களை தான் காவு வாங்குவீர்கள் என்று ஆவேசமாக பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாமக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சௌமியா அன்புமணி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை என நான் காவல்துறை தெரிவித்திருந்த நிலையில், தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் சௌமியா அன்புமணி மற்றும் பாமக மகளிர் அணி அன்னார் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைதுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சௌமியா அன்புமணி கள்ளக்குறிச்சி, மதுரை, சென்னை உள்பட பல நகரங்களில் சமீப காலமாக பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார்கள். இன்னும் எத்தனை பெண்களை காவு வாங்கப் போகிறீர்கள்?

 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட வந்த எங்களை கைது செய்துள்ளார்கள். உண்மையில் நாங்களா குற்றம் செய்தோம்? எல்லோரும் குற்றவாளிகள். குற்றவாளிகளை கைது செய்யுங்கள். பெண்களுக்காக போராட்டம் செய்ய வந்த எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்? குற்றவாளிகளை கைது செய்யாமல் நடமாட விட்டுவிட்டு போராட்டம் நடத்த எங்களை கைது செய்வதா? என ஆவேசமாக சௌமியா அன்புமணி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்! - அன்புமணி ரியாக்‌ஷன் என்ன?

பா.ஜ.க.வின் நீதிப்பேரணிக்கு அனுமதி இல்லை.. மீறி நடத்தினால் கைது: காவல்துறை எச்சரிக்கை..!

2026ஆம் ஆண்டுக்கு பின் மோடி அரசு இருக்காது: சிவசேனா எம்பி சஞ்சய் ரெளத்

யார் அந்த சார்? நேர்மையான விசாரணை வேண்டும்: அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து திருமாவளவன்..!

பாம்புடன் போஸ் கொடுத்து வீம்பாய் மாட்டிய TTF வாசன்! - வீட்டை சோதனையிட்ட வனத்துறை அதிகாரிகள்!

அடுத்த கட்டுரையில்