தென்மேற்குப் பருவமழை தொடக்கம்: இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (13:28 IST)
தென்மேற்குப் பருவமழை என்பது இந்தியாவின் முக்கியமான மழைக் காலம். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீர் வழங்கும் இந்த பருவம், இந்தாண்டு இயல்பை விட அதிக மழையை தரக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
 
ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் இந்த பருவமழை, வழக்கம்போல ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கும். பின்னர் அது கர்நாடகம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், என தொடர்ந்து நாடு முழுக்க பரவுகிறது. அதிக மழை கிடைக்கும் இடங்களில் மௌசின்ராம், சிரபுஞ்சி, கேரளாவில் நெரியாமங்கலம் உள்ளிட்டவை அடங்கும். தமிழ்நாட்டில் முக்குருத்தி, தேவாலா, பந்தலூர், சின்னகல்லாறு போன்ற மலைப்பகுதிகள் அதிக மழை பெறும்.
 
ஆனால் தூத்துக்குடி மாவட்டம் மட்டும், இந்தியாவில் மிகக் குறைவான மழையைப் பெறும் பகுதியாக இருக்கிறது. வருடத்திற்கு வெறும் 30 மிமீ மழை மட்டுமே கிடைக்கும்.
 
இந்த ஆண்டில் நீலகிரி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும். வால்பாறை, பொள்ளாச்சி, செங்கோட்டை, நாங்குநேரி போன்ற இடங்களும் அதிக மழைக்கான வாய்ப்பு உள்ள பகுதிகள்.
 
வானிலை மையம், OLR, காற்று திசை மற்றும் தொடர்ச்சியான மழைப்பதிவுகளை வைத்தே பருவமழை துவங்கியது என அறிவிக்கிறது. மழைக்காலத்தில் அணைகள் நிரம்ப வாய்ப்பு உள்ள நிலையில், இந்தியா முழுவதும் விவசாயம், நீர் தேவைகள் தண்ணீரால் நிறைவேறும் என நம்பலாம். இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்தார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments