கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் நாளை முதல் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை காலை 6 திங்கள் கிழமை காலை 6 மணியோடு முடிகின்றது.கொரோனா இரண்டாம் கட்ட அலை கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் சமீப காலமாக குறைந்துள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமலுக்குப் பின்னர் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து தமிழகத்தில் 9000க்குள் வந்துள்ளது.
கொரொனா பாதிப்பு அதிகமுள்ள திருப்பூர்,கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் சில தளர்களுடன் கூடிய ஊரடங்கு உள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதில் அடுத்த வாரம் முதல் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் பொது போக்குவரத்தை அனுமதிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதால் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதோடு நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை மீண்டும் நாளை முதல் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
20 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் ரயிகள்:
சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் (வண்டி எண்: 06865), எழும்பூர்-கொல்லம் (06101), சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் - திருவனந்தபுரம் (02695), எம்.ஜி.ஆர் சென்ட்ரல் - ஆலப்புழா (02639), எம்.ஜி.ஆர் சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் (02671), எழும்பூர் - ராமேஸ்வரம் (06851), கோவை - நாகர்கோவில் (02668), திருவனந்தபுரம் - மதுரை (06343), மதுரை - புனலூர் (06729), திருச்சி -எழும்பூர் (02654)
21 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் ரயிகள்:
தஞ்சாவூர் - எழும்பூர் (06866), கொல்லம் - எழும்பூர் (06102), திருவனந்தபுரம் - எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02696), ஆலப்புழா - எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (02640), மேட்டுப்பாளையம் - எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02672), ராமேஸ்வரம் - எழும்பூர் (06852), நாகர்கோவில் - கோவை (02667), மதுரை - திருவனந்தபுரம் (06344), புனலூர் - மதுரை (06730), எழும்பூர் - திருச்சி (02653)