ரயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (10:54 IST)
தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்னும் புதிய அறிக்கை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மதுரை திருமங்கலத்தில் இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்தன. ரயில் ஓட்டுநர் உஷார் அடைந்து வண்டியை நிறுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விசாரணையில் ஓட்டுநருக்கும், நிலைய கட்டுபாட்டு அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மொழி பிரச்சினையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே ஒரு சுற்றறிக்கையை அனைத்து ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்பு கொள்ளும்போது ஆங்கிலம் அல்லது இந்தியிலேயே பேச வேண்டும். மாநில மொழிகளில் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த சுற்றறிக்கை ரயில்வே அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments