இன்று, நாளை மின்சார ரயில்கள் ரத்து; அதிர்ச்சியில் பயணிகள்

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (13:53 IST)
போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது சென்னை மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படமால் உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே சென்னையில் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அத்திப்பட்டு, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இன்று காலை 10.15 மணி முதல் மாலை 3.25 மணி வரை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிகள் காலை 9.50 மணி முதல் மாலை 3.45 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
நாளை காலை 9.50 மணி முதல் மாலை 3.40 மணி வரை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9.50 மணி முதல் மாலை 3.50 மணி வரை வேளச்சேரி - கடற்கரை வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
சென்னை-திருவள்ளூர் மற்றும் பட்டாபிராம்-திருநின்றவூர் வழித்தடங்களில் இன்றும் நாளையும் பொறியியல் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த பகுதியில் பயணிக்கும் ரயிகலும் ரத்து செய்யப்படுகின்றன. 
 
சென்னை செண்ட்ரலில் இருந்து  காலை 9.10, 9.45, 10.00, 10.30, 11.05, 11.45, 12.00, 12.15, 12.50 மணிகளுக்கு புறப்பட்டு அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்தூர் செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் வேளச்சேரியில் இருந்து பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் செல்லும் மின்சார ரயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை ஆகிய ரயில்நிலையங்களில் நிற்காமல் செல்லும். 
 
சென்னை செண்ட்ரலில் பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும் மேல் குறிப்பிட்டுள்ள ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments