கூட்டுறவுத்துறை அமைச்சர், தெர்மாக்கோல் புகழ் செல்லூர் ராஜு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்த இடத்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் வசம் இருந்த சட்டப்பேரவை அவை முன்னவர் பதவியை பறித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அளித்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் செங்கோட்டையனும் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது. செங்கோட்டையன் தினகரன் ஆதரவு மனநிலையில் இருப்பதால் தான் எடப்பாடி பழனிச்சாமி அவரை ஓரம் கட்ட இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் அமைச்சர் செல்லூர் ராஜு இருப்பதாகவும், அவரை ஓரங்கட்டவும் எடப்பாடி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார். செல்லூர் ராஜூ சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.