Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்கனவே வெள்ளக்காடா கிடக்கு.. மறுபடி மழையா? – தவிக்கும் தென் தமிழகம்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (13:39 IST)
தென் தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைப்பருவக்காலம் முடிந்து விட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி விட்டதால் மழை நீர் தாமிரபரணி ஆற்றில் திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக பகுதிகளான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments