Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிசிஎல் கிரிக்கெட் ஊழல் புகார் எதிரொலி: உண்மை நிலவரத்தை வெளியிட்ட விஷால்

சிசிஎல் கிரிக்கெட் ஊழல் புகார் எதிரொலி:  உண்மை நிலவரத்தை வெளியிட்ட விஷால்
, திங்கள், 24 அக்டோபர் 2016 (16:07 IST)
ஊழல் புகார் வெளியானதை அடுத்து சிசிஎல் கிரிக்கெட் போட்டி வரவு, செலவு கணக்குகள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

 
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி–சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது.
 
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ”நட்சத்திர கிரிக்கெட்டில் ரூ.6 கோடி ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். வரவு, செலவு அனைத்துக்கும் நாங்கள் முறையாக கணக்கு வைத்து இருக்கிறோம்.
 
நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் எவ்வளவு வருமானம் வந்தது. எவ்வளவு செலவு ஆகி இருக்கிறது. வங்கி இருப்பில் எவ்வளவு தொகை இருக்கிறது உள்ளிட்ட கணக்கு விவரங்கள் அனைத்தையும் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி இன்று நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடுவார்” என கூறி இருந்தார்
 
அதன் படி நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரவு - செலவு கணக்குகள் இன்று நடிகர் சங்கத்தின் சமூக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

webdunia


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாதகத்தில் உள்ள கண்டத்தை கடந்த ஜெயலலிதா வீடு திரும்ப நாளாகும்: ஜோதிடர் கணிப்பு!