Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்சென்னை தொகுதியிலும் சிசிடிவி கேமராக்கள் பழுது.. அரசியல் கட்சிகள் அதிருப்தி..!

Siva
வியாழன், 9 மே 2024 (09:05 IST)
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினர் அதனை பாதுகாத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது என்றும் எந்த விதமான முறைகளும் நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிவி கேமராக்கள் பழுதாகி வருவது அரசியல் கட்சியினர்களை அதிருப்திக்கு உள்ளாகி உள்ளது. ஏற்கனவே நீலகிரி மாவட்டம், ஈரோடு மாவட்டம், தென்காசி மாவட்டம் உள்பட ஒரு சில மாவட்டங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவிக்கள்  பழுதான நிலையில் தற்போது தென்சென்னை தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவிகள் பழுதாகியதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலை. வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகியுள்ளதாகவும், காற்றுடன் பெய்த மழை காரணமாக 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் பழுதான கேமராக்கள் உடனடியாக அகற்றப்பட்டு 2 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments