Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வளர்த்த காளை கொம்பால் குத்த… பெற்ற பிள்ளை உயிரைக் காப்பாற்றிய சம்பவம் !

Advertiesment
வளர்த்த காளை கொம்பால் குத்த… பெற்ற பிள்ளை உயிரைக் காப்பாற்றிய சம்பவம் !
, வெள்ளி, 22 நவம்பர் 2019 (14:56 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் தான் வளர்த்த காளையே தன்னைக் குத்தி கொல்லப்பார்க்க பெற்ற மகன் அவரைக் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஐயர்மடம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மணிவேல். இவர் தனது வீட்டில் பசுக்களையும் ஒரு காளைமாட்டையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவர் வயலில் செய்து கொண்டிருந்த போது அவரது காளை முரண்டு பிடித்துள்ளது. அவர் அருகில் சென்று அதனை சமாதானப்படுத்த முயல அடங்காமல் அவரை வயிற்றிலும் மார்பிலும் குத்தியுள்ளது. இதனால் காயம் ஏற்பட்ட ரத்தம் வழிந்துகொண்டிருந்த அவரை விடாமல் மீண்டும் குத்தியுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிவேலின் மகன், தந்தைக்காக உயிரைப் பணயம் வைத்து காளையிடம் சென்று அதை அடக்கி விரட்டியுள்ளார். பின்னர் கீழே கிடந்த தன் தந்தையை அதனிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து உயிர்பிழைக்க வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பூர்விகா மொபைல் ’கடையில் பல லட்சம் மோசடி : ஊழியர் கைது !