Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன் – தானாகவே போலிஸில் சரண் !

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (08:10 IST)
கிருஷ்ணகிரி அருகே தாய் தன்னைக் கேட்காமலேயே நிலத்தை விற்றதால் ஆத்திரமடைந்த மகன் அவரைக் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வம் மற்றும் பாக்யலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சதிஷ் குமார் என்ற மகன் உள்ளார். செல்வம் சில மாதங்களுக்கு முன்னதாக இறந்துள்ளார்.

இதையடுத்து கேரளாவில் இருந்த மகனுக்கு தெரிவிக்காமல் நிலத்தை விற்ற பாக்யலட்சுமி அதைவைத்து கடனை அடைத்துள்ளார். இதை அறிந்து கோபமான சதீஷ் தாயிடம் தகராறு செய்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர் மார்ச் 14 (நேற்று) அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தனது தாயைக் கட்டையால் அடித்தே கொலை செய்துள்ளார்.

இதன் பின்னர் தானாகவே சென்று போலிஸில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments