Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் இருந்து வந்து தாயைக் கொன்ற மகன் – 3 மாதங்களுக்குப் பிறகு கைது !

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (10:28 IST)
சொத்துப்பிரச்சனைக் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து தனது தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவான இளைஞரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, பெசண்ட்நகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.பி. குழந்தைவேலு. இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும் பிரவீன் என்ற மகனும் உள்ளனர். உடல்நலக் கோளாறு காரணமாக குழந்தைவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். பெசண்ட்நகரில் உள்ள அவரது வீட்டில் ரத்தினம் தனியாக வசிக்க பிரவீன் இங்கிலாந்தில் வேலை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் சொத்து சம்மந்தமாக பிரவீனுக்கும் அவரது தாய் ரத்தினத்துக்கும் இடையில் கருத்துவேறுபாடு எழுந்துள்ளது. இதனால் லண்டனில் இருந்து விடுமுறைக்கு வந்த பிரவீன், ஏப்ரல் 14 ஆம் தேதி தனது தாயைக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதையடுத்து 3 மாதங்களாக அவரைத் தேடிவந்த போலிஸார் மற்றும் சைபர் கிரைம் போலிஸார் அவரது செல்போன் சிக்னல்களை டிராக் செய்து டெல்லியில் தலைமறைவாகவிருந்த அவரைக் கைது செய்தனர். அதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments