வேலூரில் 11 இஸ்லாமிய சுயேட்சை வேட்பாளர்கள் – அதிமுகவின் திட்டமா ?

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (10:21 IST)
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் 11 இஸ்லாமிய வேட்பாளர்கள் சுயேட்சையாகக் களமிறங்கியிருப்பது அதிமுகவின் திட்டம் எனக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது. தங்களது வழக்கமான வாக்கு சதவீதத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போனதுக்கான காரணமாக பாஜகவோடுக் கூட்டணி வைத்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்ததற்கு பாஜகவோடு கூட்டணி வைத்ததுதான் காரணம் என்கிற பொருளில் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார்.

இதையடுத்து இப்போது வேலூர் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு செல்வதைத் தடுக்கும் பொருட்டு 11 சுயேட்சை இஸ்லாமிய வேட்பாளர்களை அதிமுக களமிறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வியூகம் அதிமுகவுக்கு வெற்றியைக் கொடுக்குமோ இல்லையோ திமுகவிற்கு செல்லும் வாக்குகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 பில்லியன் டாலர் செலவில் இந்தியா அமெரிக்காவை இணைக்கும் கூகுள்.. டிஜிட்டல் நுழைவாயிலாக மாறும் இந்தியா..!

நாளை திருமணம்.. இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள்.. என்ன நடந்தது?

ஈரான் மீது தாக்குதல்!.. அமெரிக்காவுக்கு செக் வைத்த இங்கிலாந்து!..

ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு.. இன்ஸ்டாகிராமால் சிக்கிய மன்மதன்..!

யாருக்கு எவ்வளவு தொகுதி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய திமுக!..

அடுத்த கட்டுரையில்
Show comments