Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டன் வீட்டில் யாரோ இருக்காங்க! – தீபா புகார் விசாரணை

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (20:16 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீட்டில் யாரோ இருப்பதாக ஜெ.தீபா அளித்த புகார் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட், திராட்சை தோட்டம், போயஸ் கார்டன் வீடு என சுமார் 900 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது. இறக்கும் முன் இவற்றை ஜெயலலிதா யாருக்கும் உயில் எழுதி வைக்கவில்லை. இதனால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு உறவுமுறை வாரிசுகள் இருப்பதால் இதற்கு நிர்வாகிகளை நியமிக்க முடியாது என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் போயஸ் கார்டன் வீடு மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதில் யாரும் தற்போது வசிக்கவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போயஸ் வீட்டில் யாரோ இருப்பதாக ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா புகார் அளித்திருப்பதால், இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments