Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!

Mahendran
புதன், 12 மார்ச் 2025 (18:23 IST)
மகா கும்பமேளாக்காக வடக்கு மற்றும் மத்திய ரயில்வேக்கு தெற்கு ரயில்வே சார்பாக ரயில் பெட்டிகள் வழங்கப்பட்ட நிலையில் இதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் சில திருப்பதி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
1. திருப்பதியில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும்  (வண்டி எண்-67209) திருப்பதி - காட்பாடி பயணிகள் ரெயில் மார்ச் 13 முதல் 15 வரை ரத்து.
 
2. காட்பாடியில் இருந்து காலை 06.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67206) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் திருப்பதியில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67207) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67208) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் சேவை மார்ச் 13 முதல் 16 வரை ரத்து
 
3. திருப்பதியில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67205) திருப்பதி - காட்பாடி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து இரவு 21.10 மணிக்கு புறப்படும்  (வண்டி எண் - 67210) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 66017) காட்பாடி - ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து காலை 12.55 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 66018) ஜோலார்பேட்டை - காட்பாடி பயணிகள் ரெயில் மார்ச் 13 முதல் 17 வரை ரத்து.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments