Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல் எதிரொலி: இன்று ரத்தான ரயில்களின் விபரங்கள்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (08:51 IST)
வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தஞ்சை - சென்னை உழவன் ரயில், திருச்சி - தஞ்சை சிறப்பு கட்டண ரயில், வேளாங்கண்ணி - காரைக்கால் ரயில், காரைக்கால் - தஞ்சை ரயில் மற்றும் விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் - சென்னை, சென்னை - மன்னார்குடி, வேளாங்கண்ணி - சென்னை ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மோசமான வானிலை காரணமாக சென்னை-தூத்துகுடி விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments