Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஜா புயலுக்கு வர்தா அளவுக்கெல்லாம் சீன் இல்ல: நல்ல சேதி சொன்ன வெதர்மேன்!

Advertiesment
கஜா புயலுக்கு வர்தா அளவுக்கெல்லாம் சீன் இல்ல: நல்ல சேதி சொன்ன வெதர்மேன்!
, செவ்வாய், 13 நவம்பர் 2018 (19:41 IST)
கஜா புயல் நெருங்கி வருவதால் அதன் தாக்கம் இன்னும் 24 மணி நேரத்தில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அதன் பாதை, கடலூர் - பாம்பன் பாலம் இடையே இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தென்மேற்கு திசையில் நகர்ந்து வரும் புயல் நவம்பர் 15 ஆம் தேதி அன்று பிற்பகலில் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள தகவல்கள் பின்வருமாறு, கஜா புயல் முழுமையாக வித்தியாசமான திசையில் செல்கிறது. ஆழ்ந்த புயலாக துவங்கிய கஜா புயல் கரையை கடக்கும் முன் வலுவிழந்து, வலுவிழந்த நிலையிலேயே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வர்தா, தானே புயல் போன்று கஜா புயல் கடுமையானதல்ல, அதை நினைத்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாம்பன் அல்லது இலங்கை பகுதியில் கஜா புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 
 
ஆனால், என்னுடைய ஆய்வின்படி வரும் 15 ஆம் தேதி காலை முதல் நண்பகலுக்குள் கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 
 
மேலும், நாளை (நவம்பர் 14) முதல் 17 ஆம் தேதி வரை சென்னையில் பரவலாக மழை பெய்யும். ஆனால், அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்பப்பாரு உல்லாசம்.. தொல்ல தாங்கல... அதான் அப்படி பண்ணேன்: மனைவியின் பகீர் வாக்குமூலம்