Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவிட்டுப்பாளையம் பகுதியில் கழிவு நீர், குப்பைகள் ..சுகாதாரம் பேண சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Advertiesment
karur
, செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (22:05 IST)
புகலூர் வட்டம் நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில்   கழிவு நீர், குப்பைகள் தேங்காதவாறு சுத்தம் சுகாதாரம் பேணுதல் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகலூர் வட்டம் நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022 -2023 இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உறிஞ்சி குழி அமைக்கப்பட்டது,.

இந்த திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டு பயனற்ற முறையில் உள்ளது. இதனை சுத்தம் செய்வதோ, பராமரிப்பதோ கிடையாது.

எனவே பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்யப்பட்ட இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வருமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையாக உள்ளது.

எனவே அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர், குப்பைகள் தேங்காதவாறு சுத்தம் சுகாதாரம் பேணுதல் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெய்வதிரு வடிவேல் மறைவு... நேரில் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறி 2 லட்சம் நிதியுதவி செய்த முன்னாள் அமைச்சர்