Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதத்தை தாண்டியது சின்ன வெங்காயம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (08:12 IST)
கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் சமீபத்தில் சதத்தை தாண்டிய நிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 130 ரூபாய் விற்பனையாகி வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை அதிகரித்தது என்பதும் அதிகபட்சமாக ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது என்பதும் தெரிந்ததே. ஆனால் படிப்படியாக தக்காளி விலை குறைந்து தற்போது 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் தக்காளிக்கு பதிலாக சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று வரை 100 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இன்று 130 ரூபாய் என விற்பனையாகி வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்ன வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments