Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (11:41 IST)
பாபநாசம் அருகே காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த  6 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்ற  பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன், வெங்கடேசன், பள்ளி மாணவர்கள் கதிரவன், விஷ்ணு, சிவபாலன், ஸ்ரீநவீன், சஞ்சய் போன்ற  7 பேர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர் அப்போது  ஆற்றின் ஆழமானப் பகுதிக்கு சென்ற இவர்களில் சஞ்சய் என்பவர் மட்டும் நீந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
 
மற்ற 6 மாணவர்களும் ஆற்றில் மூழ்கிவிட்டனர் , இதனால் பதறிய அப்பகுதி மக்கள்  தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
 
மேலும், நீரில் மூழ்கிய கதிரவன் தீவிர தேடுதல்களுக்கு பிறகு, சடலங்களும் கண்டறிந்தனர். மீட்புப் பணிகளை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேரில் பார்வையிட்டார். 
 
விடுமுறையில் ஆற்றில் குளிக்க  சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்  கபிஸ்தலம் பகுதி மக்களை  பெரும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments