தமிழகத்தில் அவ்வப்போது நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது
அந்த வகையில் இன்று திடீரென 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாற்றம் குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ஜவஹர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடைத்துறை முதன்மை செயலாளராக கார்த்திக் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் மேலாண் இயக்குநராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.