6 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (13:16 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நேற்று பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் மதுரை சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் சென்னையை பொருத்தவரை சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே அடுத்து வரும் 48 மணி நேரங்களுக்கு  சென்னை மற்றும் 6 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments