Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்ட்ரல் - எக்மோருக்கு ரூ.1,800...! வட இந்திய தொழிலாளர்களை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது...!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (10:25 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு செல்ல வட இந்திய தொழிலாளர்களிடம் ரூ.1800 வாங்கிய 6 ஆட்டோ ஓட்டுனர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்
 
பீகாரில் இருந்து சென்னை வந்த 19 கூலி தொழிலாளர்களை சென்ட்ரலில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி விடுவதாக ஏற்றி  1800 ரூபாய் அடாவடியாக வாங்கியதாக ஆறு ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  
 
சென்ட்ரலில் இருந்து எழும்பூர் செல்ல நீண்ட தூரம் ஆகும் என்றும் அதனால் ஒரு ஆட்டோவிற்கு மூன்று பேர் மீதும் ஆறு ஆட்டோகளில் ஏற்றி செல்கிறோம் என்றும்  ஒரு ஆட்டோவுக்கு 300 ரூபாய் என 1800 ரூபாய் என்று பேசி உள்ளனர். 
 
ஆனால்  திடீரென சந்தேகம் அடைந்த ஒரு தொழிலாளி 100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் ஆட்டோவை சுற்றி வளைத்து விசாரணை செய்தனர். அப்போது மொழி தெரியாத வட இந்திய தொழிலாளர்களை ஏமாற்றியதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments