Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பிக்கையில்லா தீர்மானம் : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய சிவசேனா

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (10:26 IST)
பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சிவசேனாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இணந்து பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதாம் இன்று நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட இருக்கிறது.
 
தீர்மானத்தை ஆதரிக்கும் கட்சிகளின் எம்.பிக்களின் எண்ணிக்கை 150க்கும் குறைவாகவும், எதிர்த்து வாக்களிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாக இருப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவே வெற்றி பெறும் எனக்கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என நேற்று சிவசேனா அறிவித்தது. ஆனால், ஆதரவு அளிக்கப் போவதுமில்லை, எதிர்த்து வாக்களிக்கப்போவதுமில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது என்கிற நிலைப்பாட்டை சிவசேனா எடுத்துள்ளதாக நேற்று மாலை செய்திகள் வெளியானது. மேலும், பாஜகவிற்கான ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறோம். இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுப்போம் என சிவசேனா அறிவித்தது.
 
இதனையடுத்து, பஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று இரவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அதனால், தனது முடிவை மாற்றிக்கொண்ட சிவசேனா தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
 
கடந்த சில வருடங்களாக பாஜகவிற்கும், சிவசேனாவிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அந்த விவகாரம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. லோக்சபாவில் சிவசேனா கட்சிக்கு 18 எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments